Advertisment

நாடு முழுவதும் மக்கள் ஏற்றிய ஒற்றுமை தீபம்... தீபமேற்றிய பிரபலங்கள் 

Advertisment

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவின் முக்கிய பகுதிகளில்,முக்கிய நகரங்களில்மக்கள் தீபங்களை ஏற்றினர். தமிழகத்திலும் பல இடங்களில் வீடுகளில் ஒற்றுமைதீபம் ஏற்றப்பட்டது.

Advertisment

கரோனா என்ற இருள் அகல தமிழக மக்கள் ஒற்றுமை வெளிப்படுத்தி வீடுகளில் ஒளி ஏற்றினர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் தீப ஒளி ஏற்றினர். நெல்லை, தஞ்சை, நாகை, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பல வீடுகளில் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது.அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லங்களிலும் அகல் விளக்குகளில் ஒளி ஏற்றினர்.

அதேபோல் முக்கிய பிரபலங்கள், தலைவர்களும் அவரவர் இல்லங்களில் ஒளியேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு தீப ஒளி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

அதேபோல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டில் ஒளி ஏற்றினார்.தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது இல்லத்தின் முன்பு ஒளி ஏற்றினார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இல்லத்தில் தீப ஒளி ஏற்றினார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்,பிரேமலதா ஆகியோர் இல்லத்தில் ஒளியேற்றினர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,நடிகர் அக்ஷய் குமார்,பிவி..சிந்து,நடிகை நயன்தாரா, தொழிலதிபர் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி உள்ளிட்டோரும் தங்களது இல்லங்களில் தீப ஒளி ஏற்றினர்.

அதேபோல் பிரதமர் மோடியும் தீப ஒளி ஏற்றினார்.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும்தீப ஒளி ஏற்றினார். அதேபோல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசு மாளிகையில் தீப ஒளி ஏற்றினார்.

Tamilnadu modi India corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe