Skip to main content

நாடு முழுவதும் மக்கள் ஏற்றிய ஒற்றுமை தீபம்... தீபமேற்றிய பிரபலங்கள் 

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில் இந்தியாவின் முக்கிய பகுதிகளில்,முக்கிய நகரங்களில் மக்கள் தீபங்களை ஏற்றினர். தமிழகத்திலும் பல இடங்களில் வீடுகளில் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது.

கரோனா என்ற இருள் அகல தமிழக மக்கள் ஒற்றுமை வெளிப்படுத்தி வீடுகளில் ஒளி ஏற்றினர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் தீப ஒளி ஏற்றினர். நெல்லை, தஞ்சை, நாகை, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பல வீடுகளில் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது.அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லங்களிலும் அகல் விளக்குகளில் ஒளி ஏற்றினர்.  

அதேபோல் முக்கிய பிரபலங்கள், தலைவர்களும் அவரவர் இல்லங்களில் ஒளியேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு தீப ஒளி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
 

அதேபோல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டில் ஒளி ஏற்றினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது இல்லத்தின் முன்பு ஒளி ஏற்றினார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இல்லத்தில் தீப ஒளி ஏற்றினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர்  இல்லத்தில் ஒளியேற்றினர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் அக்ஷய் குமார், பிவி..சிந்து, நடிகை நயன்தாரா, தொழிலதிபர் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி உள்ளிட்டோரும் தங்களது இல்லங்களில் தீப ஒளி ஏற்றினர். 

அதேபோல் பிரதமர் மோடியும் தீப ஒளி ஏற்றினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் தீப ஒளி ஏற்றினார். அதேபோல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசு மாளிகையில் தீப ஒளி ஏற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.