Advertisment

மக்கள் கடல்...நடுவே தலைவர்கள்...

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி இன்று நடத்தும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர். மக்களவை தேர்தலை முன்னிட்டும், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாகவும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க 'பிரிகேட் பரேட்' மைதானத்தில் இன்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், அந்த கூட்டத்தில் லட்சக் கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த மைதானமே மக்கள் வெள்ளம்போல காணப்படுகிறது. தற்போது அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். மேலும் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது இந்த கூட்டத்திற்கு வந்த தலைவர்கள் ஒவ்வொருவராய் மேடையில் பேச தொடங்கியுள்ளனர்.

Advertisment

mk stalin mamta banarji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe