Advertisment

ஃபிஃபாவிற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம்!

Union Ministry of Sports letter to FIFA!

இந்திய கால்பந்து கிளப் அணிகள் ஏற்கனவே, திட்டமிட்டபோட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் ஃபிஃபாவிற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

Advertisment

நிர்வாகத்தில் மூன்றாம் நபரின் தலையீடு இருப்பதாகக் கூறி இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு ஃபிஃபா இடைக்காலத் தடை விதித்தது. இதனால் இந்தியாவில் நடைபெறவிருந்த உலக கால்பந்து போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்திய அணியினரும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட போட்டிகளில் இந்திய அணியினர் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஃபிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தடை விதிப்பதற்கு முன்னதாகவே. உஸ்பெகிஸ்தான் சென்ற கேரள கிளப் அணியினருக்கு இயன்ற உதவிகளை செய்ய அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

fifa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe