ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மத்திய அமைச்சர்!

09:46 AM Mar 02, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் சில மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று (01.03.2021) முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐதராபாத் மருத்துவமனையில் இன்று (02.03.2021) மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT