Advertisment

நடுவானில் விமான பயணிக்கு உடல்நலக் கோளாறு... சிகிச்சையளித்த மத்திய அமைச்சர்!

Union Minister treats air traveler's health problem in Naduvan!

நடுவானில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர் ஒருவர்அவருக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

டெல்லியிலிருந்து அவுரங்காபாத் சென்று கொண்டிருந்த 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ந்த விமானப் பணிப்பெண் விமானத்தில் யாரேனும் மருத்துவர்கள் உள்ளனரா என உதவி கேட்டார். அப்போது விமானத்தில் அதே விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் மற்றும் முன்னாள் அமைச்சர் சுபாஷ் பாம்ரேவும் பயணிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து 'ஏர் இந்தியா' நிறுவனம் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் பயணிக்குசிகிச்சை அளிக்கும் புகைப்படத்தையும்வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரான மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் அவுரங்காபாத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

medicine
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe