Advertisment

21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ என எழுதி பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்!

The Union Minister took charge by writing 'Om Shri Ram' 21 times!

Advertisment

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

இந்தத்தேர்தலில் முக்கிய திருப்பமாக அமைந்த 16 எம்.பி.க்கள் கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவிருப்பதாகத்தகவல் வெளியானது. அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம் மோகன் நாயுடுவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (13-06-24) எம்.பி ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாக 21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ என்று எழுதி பொறுப்பேற்றார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe