மத்திய அமைச்சர் கைது - மஹாராஷ்ட்ரா போலீசார் அதிரடி!

union minister narayan rane

மஹாராஷ்ட்ராமாநிலத்தில் நடைபெறும் ஆசிர்வாத் யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர்நாராயண் ரானே, சுதந்திர தின விழா உரையின்போது மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தை மறந்துவிட்டதாகவும், தான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என தெரிவித்தார்.

இதற்கு சிவசேனா தரப்பில்கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிவசேனா உறுப்பினர்கள் அளித்த புகாரின்பேரில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், அவரை கைது செய்ய மஹாராஷ்ட்ராபோலீசார் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்துதன் மீது பதியப்பட்ட வழக்குகளைஇரத்து செய்யுமாறு மத்திய அமைச்சர்நாராயண் ரானே, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தற்போதுநாராயண் ரானே மஹாராஷ்ட்ரா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இன்று காலை (24.08.2021) சிவசேனா தொண்டர்கள்,நாராயண் ரானேவின்வீட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, அவர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும்மோதல் ஏற்பட்டது. நாசிக் பகுதியில் பாஜக அலுவலகத்தின்மீது கல்வீச்சு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Maharashtra Uddhav Thackeray union minister narayan rane
இதையும் படியுங்கள்
Subscribe