கர்நாடகாமாநிலம் அங்கோலா பகுதியில், கார் விபத்துக்குள்ளானதில் மத்திய ஆயுஷ்அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயமடைந்துள்ளார்.
மேலும், அவருடன் காரில் சென்ற அமைச்சரின் மனைவி மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அமைச்சரின் மனைவி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சருக்கு சிகிச்சை தர தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோவா முதல்வருக்குபிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.