union minister giriraj singh says godse is also a valuable son of india

Advertisment

மஹாராஷ்டிராவில் உள்ள சில நகரங்களில் சமீபத்தில்வன்முறைகள்நடைபெற்றன. இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘மஹாராஷ்டிராவில் திடீரென அவுரங்கசீப்பின் வாரிசுகள் பிறந்துள்ளனர்' எனத்தெரிவித்து இருந்தார். அதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜகவினர் காந்தியை கொலை செய்த கோட்சேயின் வாரிசுகள்" என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

இந்நிலையில்சத்தீஷ்கர் மாநிலம்தாண்டேவாடா பகுதிக்குநேற்றுமத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பயணம் மேற்கொண்டுஇருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது செய்தியாளர்கள், அசாதுதீன் ஓவைசிகருத்துகுறித்துகிரிராஜ் சிங்கிடம்கேட்டதற்கு, "தங்களை பாபர்மற்றும் அவுரங்கசீப் போன்றமுகலாய மன்னர்களின்குழந்தைகள் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சிஅடைபவர்கள்தாயின் உண்மையானமகனாக இருக்க முடியாது. கோட்சே மகாத்மா காந்தியை கொன்றவர் என்றால்அவரும் இந்தியாவின் மதிப்புமிக்க மகன் தான். கோட்சே இந்தியாவில் பிறந்தவர். முகலாய மன்னர்களானபாபர், அவுரங்கசீப்போன்றஆக்கிரமிப்பாளர்அல்ல" எனத்தெரிவித்தார்.