Advertisment

தமிழகத்தில் அணுக்கழிவு மையம்: கேள்வி கேட்ட தயாநிதி மாறன்.. உதவிக்கு அழைத்த மத்திய அமைச்சர்...

தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான தயாநிதி மாறனின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஒன்று சேர்ந்து மக்களின் அச்சத்தை போக்குவோம் என பதிலளித்துள்ளார்.

Advertisment

union minister explanation about atomic waste storage in tamilnadu

மக்களவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என கேள்வியெழுப்பினார்.

Advertisment

அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களின் அச்சத்தை போக்கும் பணியில் அரசுக்கு உதவ வருமாறு தயாநிதி மாறனுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் உலகம் முழுவதும் எல்லா நாட்டிலும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இங்கும் பின்பற்றப்படுவதாகவும், கூடங்குளம் மட்டுமல்ல நாட்டின் மற்ற எல்லா அணு உலைகளிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுவதாகவும், இது பாதுகாப்பானது தான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

loksabha thirunelveli kudankulam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe