Advertisment

பஹல்காமில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!

Union Minister Amit Shah pays tribute to tost his life in Pahalgam

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரன் புல்வெளிகளில் நேற்று ((22.04.2025) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடை அணிந்து வந்த பயங்கரவாத கும்பல், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிவிட முடியாது” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ரெசிஸ்டென்ட்ஸ் பிராண்ட் என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்களை ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான், “இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை. எனவே இந்த விவகாரத்தில் பாகிஸ்தானைக் குறை கூற வேண்டாம்” எனப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Amit shah jammu and kashmir srinagar Pahalgam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe