Advertisment

யாராவது "ஜெய்ஸ்ரீராம்" என கூற கட்டாயப்படுத்தினால்... பாஜக மத்திய அமைச்சரின் கடும் எச்சரிக்கை...

பசுப் பாதுகாவலர்கள் என கூறிக்கொண்டு மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களை தாக்குவதையும், ஜெய்ஸ்ரீராம் என கூற வற்புறுத்துவதையும் செய்யகூடாது என பாஜக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

Advertisment

union minister about cow vigilance and chanting of jai shriram

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. இத்தகைய வன்முறைகளில் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். ஒரு விஷயத்தைச் செய்ய சொல்லி யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. இந்திய கிராமங்களில் இன்றளவும் ராம் ராம் சொல்லும் பழக்கம் நிறைந்திருக்கிறது. இந்து, இஸ்லாமியர்கள் பாகுபாடின்றி இதைச் சொல்கின்றனர். இந்த தேசம் மதச்சார்பற்றதாக இருப்பதற்கு சிறுபான்மையினர் மட்டுமே காரணமில்லை. பெரும்பான்மை சமூகத்தினரின் மரபணுவும் காரணமே" என கூறினார்.

cow vigilance
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe