/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-oath-2.jpg)
இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/um-art-1_0.jpg)
அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி,ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், குமாரசாமி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி, ராஜிவ் ரஞ்சன் சிங், சர்பானந்த சோனாவால், விரேந்திர குமார், ராம் மோகன் நாயுடு, பிரகலாத் ஜோஷி, ஜூவல் ஓரம், கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்னவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், கஜேந்திரசிங் செகாவத், அன்னபூர்ணா தேவி, கிரண் ரிஜிஜூ, ஹர்திப்சிங் புரி, கிஷன் ரெட்டி, சிராக் பாஸ்வான், மன்சுக் மாண்டவியா மற்றும் சி.ஆர்.பர்டில் ஆகியோருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/um-art-2_0.jpg)
இதனையடுத்து தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவி பதவியேற்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் மீண்டும் இணையமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து ஆங்கிலத்தில் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டார். மேலும், நடிகர் சுரேஷ் கோபியும் இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். பதவியேற்புக்கு பின்னர் அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் குழுபுகைப்படம் எடுத்துகொண்டனர். அதன் பின்னர் பதவியேற்பு விழா நிறைவடைந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/l-murugan-oath-art.jpg)
மேலும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்சு, செஷெல்ஸ் துணை அதிபர் அஹமட் அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்பில் கலந்துகொண்ட வெளிநாட்டு தலைவர்களுடன் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/um-group-photo-art.jpg)
அதே சமயம் மோடி அமைச்சரவையில் 27 பேர் இதற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி), 10 பேர் பட்டியலின பிரிவினர், 5 பேர் பழங்குடியினர், சிறுபான்மையினர் 5 பேர் என மொத்தம் 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)