Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு.... 100-  க்கும் மேற்பட்டோர் கைது!

union home minister amitha arrived puducherry police

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (24/04/2022) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் அமித்ஷாவை கண்டித்தும், புதுச்சேரி மாநிலத்தைப் புறக்கணிக்கும்மத்திய உள்துறை அமைச்சகத்தைக் கண்டித்தும், நீட் தேர்வைரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், "புதுச்சேரி மாநிலத்தை வஞ்சிக்கும் அமித்ஷாவே திரும்ப போ" எனக் கோரி புதுச்சேரி பெரியார் சிலை அருகே தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு சிலர் திடீரென அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அந்த உருவபொம்மையைப் பறிக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100- க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Amitsha Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe