/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amitshahh-ni_0.jpg)
டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.கசெயற்குழு கூட்டம் இன்று (18-02-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, “சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவதிலும், சரத்பவார் தனது மகளை முதல்வராக்குவதிலும்குறிக்கோளாக இருக்கிறார்கள். குடும்பத்திற்காக ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள், என்றாவது ஏழைகளின் நலனைப் பற்றி சிந்திப்பார்களா?வரவுள்ள தேர்தல் பாண்டவர்களுக்கும்கெளரவர்களுக்கும் இடையிலான மகாபாரதப் போர் போன்றது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான குடும்ப கட்சிகளுக்கும் இடையேயான போர் ஆகும்.
75 ஆண்டுகளில் 17 மக்களவைத் தேர்தலில், 22 அரசாங்கங்களையும் மற்றும் 15 பிரதமர்களையும் இந்தியா கண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் ஒட்டுமொத்த வளர்ச்சி, ஒவ்வொரு துறையின் வளர்ச்சி, ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி 3.0 ஆட்சியில் பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுபடும். பிரதமர் மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)