ADVERTISEMENT

"கரோனா கட்டுப்பாடுகளை அதிகரியுங்கள்"- கேரளாவிற்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!

04:36 PM Aug 28, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கேரளாவில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 32,801 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இவ்வாறு கேரளாவில் கரோனா அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேரள அரசிற்கு கரோனா பரவலை கட்டுப்படுத்துவது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கேரளாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிக கரோனா உறுதியாகும் சதவீதம் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர், கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு கேரளாவை அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேரளாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; அரசு தனது கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். கரோனா பரிசோதனைகளை சோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். கரோனா கிளஸ்டர்கள் உள்ள பகுதிகளில் மத்திய அரசின் நெறிமுறைகளின்படி செயல்பட வேண்டும். கரோனா பாதிக்கப்பட்ட நபரை கண்டறியும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். வீட்டு தனிமையில் இருப்பவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எந்த விலை கொடுத்தாவது கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தவேண்டும். கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும்.

அதிக கரோனா பரவல் உள்ள இடங்களில் மாதிரிகளை மரபணு வரிசைமுறை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கரோனாவால் பாதிக்கப்படும் அனைவரின் மாதிரிகளையும் மரபணு வரிசைமுறை சோதனைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT