Advertisment

"கரோனா கட்டுப்பாடுகளை அதிகரியுங்கள்"- கேரளாவிற்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!

union health ministry

கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது நாளாக நேற்றுகேரளாவில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 32,801 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

Advertisment

இவ்வாறு கேரளாவில் கரோனாஅதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேரள அரசிற்குகரோனாபரவலை கட்டுப்படுத்துவதுகடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கேரளாவின்அனைத்து மாநிலங்களிலும் அதிக கரோனாஉறுதியாகும் சதவீதம் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளமத்திய சுகாதாரத்துறை செயலாளர், கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு கேரளாவை அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கேரளாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; அரசு தனது கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். கரோனா பரிசோதனைகளை சோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். கரோனா கிளஸ்டர்கள் உள்ள பகுதிகளில்மத்திய அரசின் நெறிமுறைகளின்படி செயல்பட வேண்டும். கரோனாபாதிக்கப்பட்ட நபரை கண்டறியும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். வீட்டு தனிமையில் இருப்பவர்களைதீவிரமாக கண்காணிக்க வேண்டும். எந்த விலை கொடுத்தாவது கரோனாபாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தவேண்டும். கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும்.

அதிக கரோனாபரவல் உள்ள இடங்களில் மாதிரிகளை மரபணு வரிசைமுறை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகும்கரோனாவால்பாதிக்கப்படும் அனைவரின் மாதிரிகளையும் மரபணு வரிசைமுறை சோதனைக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறுமத்திய சுகாதாரத்துறை செயலாளர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

corona virus union health minister Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe