Advertisment

சிறார்களுக்கு தடுப்பூசி; மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய மத்திய சுகாதாரத்துறை!

vaccine

Advertisment

இந்தியாவில் கரோனாபரவல் சில மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான்பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா மற்றும்ஒமிக்ரான்பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி,இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அண்மையில் அறிவித்தார்.

இந்தநிலையில்மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,15-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்த, தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 15-18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த பிரத்தியேக மையங்களை அமைக்கலாம் எனவும்மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைக்கு15-18 வயதுடையவர்களுக்குக் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமேசெலுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

VACCINE
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe