BHARATI PAWAR

Advertisment

இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நிபுணர்கள் இந்தியாவில் கரோனாவின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சகர் பாரதி பவாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் கரோனா உறுதியானதையடுத்து தன்னை வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டுள்ளதாக கூறியுள்ள பாரதி பவார், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.