union minister harshavardhan

Advertisment

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இன்று ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது, கரோனாதடுப்பூசிகள் குறித்துபல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், 50 வயதிற்குமேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிசெலுத்தும் பணிகள்துவங்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், மார்ச்மாதத்தில்50 வயதிற்கும்மேற்பட்டவர்களுக்கு கரோனாதடுப்பூசிசெலுத்தும் நிலையில்நாம் இருப்போம். கடந்த ஏழு நாட்களாகநாட்டின்188 மாவட்டங்களில் புதியதாக கரோனாதொற்று உறுதி செய்யப்படவில்லை. 80 முதல் 85 சதவீத முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20 முதல் 25 நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கவழிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 18 முதல் 20 தடுப்பூசிகள் தயாரிப்பு நிலையில்உள்ளன. அவற்றைவரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், 'அனைவருக்கும் ஆரோக்கியம்' என்ற கனவு உலகில் எப்போதாவது நிறைவேறுமானால், அதன் மாதிரி இந்தியாவில் உருவாக்கப்படும் என்று நான் நம்புகிறேன். நமது முழுமையான அணுகுமுறை, பண்டைய மருத்துவ ஞானம், பிற சுகாதார வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் இணைந்து இவ்வுலகிற்கு ஒரு மாதிரியைஉருவாக்கும். கரோனாதடுப்பூசியால் எந்த மரணமும்பதிவாகவில்லை. தடுப்பூசிசெலுத்திக்கொண்ட பிறகு, மரணம் நிகழ்ந்தால், அது விசாரிக்கப்படுகிறது. வழக்கமானபக்கவிளைவுகள் கூட குறைந்தநபர்களுக்கே ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.