Advertisment

"வீட்டுத் தனிமையில் இருப்பவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

mansukh mandaviya

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்தது.

Advertisment

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், டெல்லி, லடாக், உத்தரப்பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைசேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களுடன்கரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மன்சுக் மாண்டவியா,இசஞ்சீவனி போன்ற தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கும் திட்டங்களில் கவனம் செலுத்துமாறும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைத்தீவிரமாக கண்காணிக்குமாறும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களைஅறிவுறுத்தியுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe