Advertisment

இந்த செயல் வருத்தமளிக்கிறது... வேதனை  தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,86,406 ஆக உயர்ந்த நிலையில், இதில் 1,02,393 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையிலும் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை எட்டியுள்ளது.

Advertisment

இந்நிலையில் கரோனாதடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை வீட்டுஉரிமையாளர்கள் வீட்டை விட்டு காலி செய்யசொல்வதாககேள்விப்படும் செய்திகள்வருத்தத்தை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Advertisment

Union Health Minister Harsh Vardhan

கரோனாவைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைகாக்கபல்லாயிரக்கணக்கானமருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன்பணிசெய்து வருகின்றனர். இந்நிலையில் கரோனாஅச்சம் காரணமாகமருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வாடகைக்கு தங்கியிருக்கும் வீடுகளைவீட்டின் உரிமையாளர்கள் காலி செய்யசொல்வது வேதனை அளிக்கிறது.சென்னை, டெல்லி போன்ற பகுதிகளில் இதுபோன்று நடப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது எனமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Harsh vardhan Medical India corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe