Advertisment

ஒமிக்ரான் கரோனா: மாநிலங்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

mansukh mandaviya

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்வகை கரோனா, தற்போது 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான்கரோனாகுறித்த அச்சத்தால், உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோல் சில நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டவர் வருவதற்குத் தடை விதித்துள்ளன.

Advertisment

அதேபோல் இந்தியாவும் சர்வதேச வர்த்தக விமானப் போக்குவரத்தை தொடங்குவதை ஒத்திவைத்துள்ளது. இந்தச் சூழலில்,விமான நிலையத்தில் பயணிகளைக் கண்காணிப்பது மற்றும் பரிசோதனை செய்வது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாமாநிலங்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகஅதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,விமான நிலைய பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் துறைமுக சுகாதார அதிகாரிகள் பங்கேற்பார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

OMICRON union health minister mansukh mandaviya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe