corona

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 31,445 பேருக்கு கரோனாஉறுதியானது. இது நாட்டில் நேற்று பதிவான கரோனா எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதமாகும்.

Advertisment

அதேபோல் மஹாராஷ்ட்ராமாநிலத்திலும்சில தினங்களுக்கு பிறகு, தினசரி கரோனாபாதிப்பு நேற்று ஐந்தாயிரத்தைகடந்தது. இதனையடுத்துஇரு மாநிலங்களிலும் கரோனாஅதிகரித்து வருவது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரும், மத்திய உள்துறை செயலாளரும்காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களைசேர்ந்த தலைமை செயலாளர்களும், மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர் எனவும்அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.