இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித்தவித்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை, கடந்த 2018ஆம் ஆண்டே விற்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால், அப்போது ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன்வரவில்லை.
இந்தநிலையில்சில மாதங்களுக்குமுன்னர் ஏர் இந்தியாவை விற்பதற்கான அறிவிப்பைமத்திய அரசு வெளியிட்டது.இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. கடந்தாண்டு ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தொகையை சமர்ப்பித்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்தைடாடா குழுமம் வங்கியுள்ளதாகமத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில்தற்போது ஏர் இந்தியா நிறுவனம், அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.1932ஆம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸ்தான் 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது. இதன்பின்னர் 1953ஆம் ஆண்டு ஏர் இந்தியா அரசுடைமையாக்கப்பட்டது. இந்தநிலையில் ஏர் இந்தியா தற்போது டாடா குழுமத்திற்கேசென்றுள்ளது.
ஏர் இந்தியா முறைப்படி டாடா குழுமத்திடம்இன்று ஒப்படைக்கப்படுவதற்குமுன்பாக, டாடா சான்ஸின்தலைவர் சந்திரசேகரன், பிரதமர் மோடியை சந்தித்ததுகுறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதையடுத்துசெய்தியாளர்களிடம் பேசியடாடா சான்ஸின்தலைவர் சந்திரசேகரன், "இந்த (நிறுவனத்தை ஒப்படைப்பதற்கான) செயல்முறை நிறைவடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்தில் இணைந்ததுமகிழ்ச்சியளிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்க அனைவருடனும் இணைந்து நடைபோடுவதைநாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.