2022 -23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் இன்று மாலை 4.30 மணியளவில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாகாவும், அதில் முக்கியமான பொருளாதார விவகாரம் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.