Advertisment

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க நீங்கள் என்ன சுகாதாரத்துறை அமைச்சரா..? நிர்மலா சீதாராமனுடன் மல்லுக்கட்டிய பெண்!

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இ-சிகரெட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதுக்குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண் தொழிலதிபரான கிரண் மசும்தர் ஷா, " இ-சிகரெட்களுக்கு தடை விதிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ள நிதியமைச்சர் ஏன் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கவில்லை? இதை நிதியமைச்சர் ஏன் வெளியிட வேண்டும்? அவர் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லையே?" என வினவியிருந்தார். அத்துடன் , நிதியமைச்சராக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், அதற்காக என்ன செய்கிறீர்கள் என்பது பற்றியும் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறி இருந்தார்.

Advertisment

இதற்கு பதிலளித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், "கிரண் அவர்களே, இந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பேச துவங்குவதற்கு முன்பே நான் கூறிவிட்டேன், அமைச்சரவை குழு கூட்டம் எனது தலைமையில் நடந்ததால் அதன் விபரங்களை கூறுகிறேன் என்று. அதுமட்டுமின்றி சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது சர்வதேச நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். அவர் நாட்டில் இல்லை. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் என்னுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இது தான் அரசு செய்தியாளர் சந்திப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளை என்பது உங்களுக்கே தெரியும்.நிதியமைச்சர் என்ற முறையில் பொருளாதாரத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து அதை பற்றி பேசியும் வருகிறேன். பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்". இவ்வாறு நிர்மலா தனது பதில் டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

Nirmala Sitharaman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe