Skip to main content

மத்திய பட்ஜெட்டில் உங்களின் கருத்துக்கள் இடம் பெற வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதில் பாஜக கட்சி மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் 57 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.

 

 

my government budget ideas and suggestions

 

 


மத்திய பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பட்ஜெட் குறித்து இணையதளம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மத்திய பட்ஜெட் 2019-2020 குறித்து கருத்துக்களை தெரிவிக்க இணையதள முகவரி: https://www.mygov.in/ சென்று முதலில் நிரந்தர பதிவை (REGISTER) உருவாக்க வேண்டும். அதற்கு பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை கட்டாயம் குறிப்பிட்டு "LOG ID" உருவாக்க வேண்டும். அதன் பிறகு "LOG IN" செய்வதற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை குறிப்பிட்டால், அந்த எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும்.

 

 

my government budget ideas and suggestions

 

 

அதில் ரகசிய குறியீடு எண் இடம் பெற்றிருக்கும். அதை "LOG ID" யில் பதிவு செய்தால் போதும். உங்களின் கணக்கு "OPEN" ஆகும். அதில் மத்திய பட்ஜெட் 2019 என்ற 'OPTIONS' இடம் பெற்றிருக்கும். அதனை கிளிக் செய்து 'COMMAND' பகுதியில் பட்ஜெட் குறித்த கருத்துக்களை மக்கள் அனைவரும் எளிதாக தெரிவிக்கலாம். அதே போல் மத்திய அரசு திட்டங்கள் சம்மந்தமான அனைத்து கருத்துக்களையும் இதே இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் குறித்த கருத்துக்களை தெரிவிக்க கடைசி நாள் ஜூன் 20 ஆம் தேதி ஆகும்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.