Skip to main content

ஆசிரியர் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

TEACHER ELIGIBILITY TEST CERTIFICATE UNION EDUCATION MINISTER

 

ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (டெட்) வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆசிரியர் தேர்வு சான்றிதழ் (Teacher Eligibility Test- TET) ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்பதை வாழ்நாள் முழுவதும் என்று மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2011ஆம் ஆண்டுமுதல் ஆசிரியர் தேர்வு சான்றிதழ் பெற்றவர்களுக்குப் பொருந்தும். காலாவதியானச் சான்றிதழை மறுமதிப்பீடு செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

19 நகரங்களில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

National Teacher Qualification Examination in 19 Cities!

 

தமிழ்நாட்டில் 19 நகரங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 13- ஆம் தேதி வரை கணினி மூலம் நடத்தப்படுகிறது. 

 

சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியானது!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

ctet results announced the cbse

 

ஜனவரி- 31 ஆம் தேதி நடந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (Central Teacher Eligibility Test- CTET) முடிவுகளை இன்று (26/02/2021) வெளியிட்டது சி.பி.எஸ்.சி. 

 

இது தொடர்பாக சி.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கு 16,11,423 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 12,47,217 பேர் தேர்வை எழுதிய நிலையில், 4,14,798 பேர் தகுதிபெற்றுள்ளனர். அதேபோல், இரண்டாம் தாளுக்கு 14,47,551 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 11,04,454 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,39,501 பேர் தகுதிபெற்றுள்ளனர். தேர்வர்கள் www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று, தங்களது பதிவு எண்ணை (Roll Number) பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.