Published on 21/04/2021 | Edited on 21/04/2021

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் அரசியல் தலைவர்களுக்கும் கரோனா உறுதியாகி வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ரமேஷ் போக்ரியால், மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை விழிப்புணர்வுடன் இருக்கும்படியும், கரோனா பரிசோதனையை செய்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.