இந்திய விமானப்படைக்கு 'ஆகாஷ் ஏவுகணை' திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய விமானப்படைக்கு ரூபாய் 5,000 கோடி மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை திட்டத்தை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய விமானப்படையின் பலத்தை அதிகப்படுத்த 'ஆகாஷ் ஏவுகணை' திட்டத்தை விமானப்படைக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 'பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி' கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக 'ஆகாஷ் ஏவுகணையை' விமானப்படை பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் பயன்படுத்த உள்ளது.

union defence high commission decide in aakash missile attached in indian airforce

இந்த ஏவுகணை முழுக்க முழுக்க அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. மேலும் ஆகாஷ் ஏவுகணையுடன் பிற நாட்டின் ஏவுகணைகளும் பரிசோதிக்கப்பட்டது. அதில் ஆகாஷ் ஏவுகணை சிறப்பாக செயல்பட்டது. ஆகாஷ் ஏவுகணை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

union defence high commission decide in aakash missile attached in indian airforce

ஆகவே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆகாஷ் ஏவுகணை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை மூலம் தீவிரவாத தாக்குதல்களை எளிதில் முறியடிக்க முடியும்.டெல்லியில் நடந்த சுதந்திர தின அணிவகுப்பில் 'ஆகாஷ் ஏவுகணை' இடம் பெற்றது. இந்தியாவிடம் 6 ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளது.

aakash missile decide indian air force union defence high commission
இதையும் படியுங்கள்
Subscribe