Advertisment

டெல்லி விரையும் எம்.பி.க்கள் - நாளை மறுநாள் விரிவாக்கப்படும் மத்திய அமைச்சரவை!

MODI AMITSHAH

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போது 53 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில், தற்போதையமந்திரி சபையை விரிவாக்கவும், சில அமைச்சர்களின் துறையை மாற்றவும் பாஜக முடிவு செய்துள்ளதாவும், இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Advertisment

இந்தநிலையில்இன்று (06.07.2021), மத்திய அமைச்சராக இருந்ததவார்ச்சந்த் கெஹ்லோட், கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படப்போவதாகதகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இதனைஉறுதிப்படுத்தும் விதமாக,ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லி செல்கிறார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளவராககருதப்படும்ஜனதா தள தலைவர் ஆர்.சி.பி சிங் இன்று காலை டெல்லி சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Amit shah Narendra Modi UNION CABINET
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe