PIYUSH GOYAL

Advertisment

கரும்புக்கானநியாயமான மற்றும் ஊதிய விலையை குவிண்டாலுக்கு 290 ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நியாயமான மற்றும் ஊதிய விலை (FRP) என்பது சக்கரைஆலைகள் கரும்பினைவாங்குவதற்கு தர வேண்டிய குறைந்த பட்சவிலையாகும்.

கரும்புக்கானநியாயமான மற்றும் ஊதிய விலை உயரத்தப்பட்டதன்மூலம், 5 கோடி கரும்பு விவசாயிகளும்அவர்களை சார்ந்திருப்பவர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சர்க்கரை ஆலைகளில்பணிபுரியும் 5 லட்சம் ஊழியர்களும்இதன் மூலம் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் 10 சதவீத சர்க்கரையை உற்பத்தி அடிப்படையில் இந்தநியாயமான மற்றும் ஊதிய விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 2020-2021 சந்தை ஆண்டில் நியாயமான மற்றும் ஊதிய விலை குவிண்டாலுக்கு 275 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.