Skip to main content

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

farm laws

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கிட்டத்தட்ட ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.

 

இந்தநிலையில் இன்று (24.11.2021), பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ஏற்கனவே, குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவதற்காக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்