டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொருளாதாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் கூறுகின்றன.

Advertisment

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "கரோனா சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் குற்றவியல் தண்டனை சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத் தண்டனையுடன் ரூபாய் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

union cabinet approves ordinence minister prakash javadekar say

மருத்துவமனைகள், வாகனங்களைச் சேதப்படுத்தினால் இரு மடங்கு அபராதத்தொகை வசூலிக்கப்படும். மருத்துவர்களைக் காக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வரவும்,தொற்று நோய்கள் சட்டம் 1897-ல் திருத்தம் கொண்டு வரவும்மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அவசரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது" என்றார்.

Advertisment

இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூபாய் 15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதில் அவசரக் கால நிதியாக ரூபாய் 7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.