மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

union cabinet approves government employees diwali bonus says union minister

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி மூலம் இன்று (21/10/2020) காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,"மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விஜயதசமிக்கு முன், ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும். 30 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூபாய் 3,737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போனஸ் மூலம் பண்டிகைக் காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்துபொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தலை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது." இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

DIWALI BONUS union cabinet approves UNION MINISTER PRAKASH JAVADEKAR
இதையும் படியுங்கள்
Subscribe