டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (08/09/2021) காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ராபி பருவ பயிர்களை சந்தைப்படுத்தல் பருவம் 2022 - 2023ஆம் ஆண்டின்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதேபோல், ஜவுளி உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 10,683 கோடியில் சலுகை அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்தியஅமைச்சர் பியூஸ் கோயல், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜவுளித்துறைக்கு சலுகைகள் வழங்கப்படும். உற்பத்தி அடிப்படையில் சலுகை வழங்கப்படுவதன் மூலம் ஜவுளி ஏற்றுமதியும் அதிகரிக்கும். ஜவுளித்துறைக்கு அளிக்கப்படும் சலுகைகள் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும்" என தெரிவித்தார்.