பட்ஜெட்டை மக்களிடம் கொண்டுசேர்க்க மத்திய அரசு எடுத்த புதுமுயற்சி!

union budget app peoples watching live update

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (29/01/2021) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணித்தனர். மேலும், 2021- 2022 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதலில் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்பு மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை பிப்ரவரி 1- ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டாவது முறையாக வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

union budget app peoples watching live update

மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு மத்திய அரசு சலுகைகளை வழங்கும், எந்தெந்த துறைக்கு வரி குறைக்கப்படும், கல்வி, வேலைவாய்ப்பு சலுகைகள் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் மக்களிடையே நிலவுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை அனைத்துத் தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், புதிய முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

அதன்படி, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) என்ற நிறுவனம் மூலம் மத்திய பட்ஜெட்டிற்கு என்று புதிய ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களதுசெல்ஃபோனில் கூகுள் பிளேஅல்லதுஐஓஎஸ்-ல் 'Union Budget' என டைப் செய்து செயலியைப் பதிவிறக்கம் செய்து, பின்பு மத்திய பட்ஜெட் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

union budget app peoples watching live update

மத்திய அரசின் இந்தப் புதிய முயற்சிக்கு இளைஞர்கள், பொருளாதர வல்லுநர்கள், சாமானியர்கள் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டுக்கு என்று செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. மேலும், பட்ஜெட் குறித்த துல்லியத் தகவல்கள் மக்களிடம் சென்றடையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

government Parliament union budget
இதையும் படியுங்கள்
Subscribe