மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், பல்வேறு போராட்டங்களில்ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய அவர்கள், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை, வீடு திரும்பப் போவதில்லை என்ற முடிவில் தீவிரமாக உள்ளனர்.
இந்தநிலையில்மத்திய வேளாண் துறை அமைச்சர், கரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்றும், பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்,பல விவசாய சங்கங்கள், பொருளாதார வல்லுநர்கள் வேளாண்மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் சில விவசாயிகள் இந்த மசோதாக்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் அரசாங்கம் 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். பிரச்னைக்குரிய பகுதிகளைப் பற்றி விவாதித்து அவற்றில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முன்வந்தோம். விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொள்ளாததோடுகாரணமும் கூறவில்லை. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாதபோதோ அல்லது சங்கத்துக்கு சாதகமான பதில் கிடைக்காதபோதோபோராட்டம் தொடரும். இங்கு எப்படியானாலும் போராட்டத்தைத் தொடரவேண்டும்என வேளாண் சங்கங்கள் முடிவெடுத்தன" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கரோனாபரவலை கருத்தில் கொண்டு குழந்தைகளையும், வயதானவர்களையும் வீட்டிற்குச் செல்லுமாறுகூறவேண்டும் என விவசாய சங்கத் தலைவர்களைநான் பலமுறை வலியுறுத்தினேன். இப்போது கரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. விவசாயிகளும் அவர்களின் சங்கங்களும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அவர்கள் போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" எனவும் கூறியுள்ளார்.