ஆந்திரா மர்ம நோய் பரவல்: சந்தேகம் கிளப்பும் சந்திர பாபு நாயுடு!

chandra babu naidu

ஆந்திராமாநிலத்தின் மேற்கு கோதாவரிபகுதியில் அமைந்துள்ளது எலுரு மண்டலம். இம்மாவட்டத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென மர்ம நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாயில் நுரைதள்ளுவதோடுமயக்கமடைந்து விடுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மர்மநோய் எதனால்ஏற்பட்டது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குமட்டல், வலிப்புமற்றும் மயக்கம் ஆகிய அறிகுறிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களில் சிலர் திடீர், திடீரென ஒலி எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலமுதல்வர் ஜெகன்மோகன், எள்ளுரு மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துஆறுதல் கூறினார்.

இதற்கிடையே, ஆந்திரமாநிலமுன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, இந்த மர்ம நோய்க்கு இதற்குகுடிநீர்மாசுப்பாடேகாரணம்எனகுற்றம்சாட்டினார். மேலும், எள்ளுருமாவட்டத்தில் நடந்த நீர் மாசுபாடு காரணமாகஆந்திரா முழுவதும் சுகாதாரஅவசரநிலையை பிரகனப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தஅவர், இந்த பிரச்சனை ஆந்திர சுகாதாரத்துறையின் சீரழிவை காட்டுகிறது என விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது, ஆந்திரஅரசு எள்ளுருபிரச்னையைகையாளும் விதத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளட்விட்டர் பதிவில், " ஆந்திரஅரசு, எள்ளுருசம்பவத்தை தவறாக கையாளும் விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த மர்மமான உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஸ்ரீதர்என்பவரின் உடல், அவரதுகுடும்பத்தாரிடம்நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று இரவு திரும்பிவந்து, ஸ்ரீதரின் உடலைஉடற்கூறு ஆய்வு செய்யவேண்டுமென திரும்ப கேட்கின்றனர். ஆந்திரா அரசு எதைமறைக்க முயல்கிறது" எனகேள்விஎழுப்பி, சுகாதாரத்துறை அதிகாரிகள் உடலைதிரும்ப கேட்கும் விடீயோவையும் பதிவிட்டுள்ளார்.

Andhra Chandrababu Naidu jeganmohan reddy
இதையும் படியுங்கள்
Subscribe