Skip to main content

வெளியே வந்தது பூனை... பறிபோன வேலை வாய்ப்பு... மறைக்க முயன்ற அரசு...!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

 

ஊ

 

இந்தியாவின் வேலையின்மை கடந்த 45 வருடங்கள் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய புள்ளிவிவர ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரை எடுக்கப்பட்ட வேலையின்மை பற்றிய புள்ளிவிவரத்தில் இது தெரியவந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளது என்றும் மேலும் இந்தியாவின் வேலையின்மை 6.1%-ஆக இருக்கிறது என்றும் அந்த ஆய்வுத் தெரிவித்துள்ளது. 

 

இந்த அளவு அதிகமான வேலையின்மை கடந்த 1972-73 ஆண்டுகளில் இருந்தது. அதன்பின் 45 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்த அளவு வேலையின்மை உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-12 ஆண்டின் வேலையின்மை 2.2%-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த வேலையின்மை புள்ளிவிவரத்தில் மற்றொரு முக்கிய தகவலும் தெரியவந்துள்ளது. மொத்த வேலையின்மை 6.1%. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது 15 முதல் 29 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களே. 

 

இதில் கிராமப்புற இளைஞர்களில் ஆண்களின் வேலையின்மை 17.4%-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2011-12-ம் ஆண்டில் 5%-ஆக இருந்தது. அதேபோல் கிராமப்புற பெண்களின் வேலையின்மை 13.6%-ஆக உயர்ந்துள்ளது. இது 2011-12-ம் ஆண்டில் 4.8%-ஆக இருந்தது என அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. மேலும் நகர்ப்புறங்களில் இந்த வேலையின்மை ஆண்களுக்கு 18.7% எனவும், பெண்களுக்கு 27.2% எனவும் 2017-18 ஆண்டில் உயர்ந்துள்ளது. 

 

வேலையின்மையில் அதிகமாக இருப்பது படித்த இளைஞர்களாகவே உள்ளனர். கிராமப்புற பட்டதாரி பெண்களின் வேலையின்மை 2017-18-ல் 17.3%-ஆக உள்ளது. இது 2004-05-ல் 9.7%-ஆகவும், 2011-12-ல் 15.2%ஆகவும் இருந்தது என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. மேலும் கிராமப்புற பட்டதாரி ஆண்களின் வேலையின்மை, 10.5%-ஆக 2017-18 ஆண்டில் உயர்ந்துள்ளது. இது 2004-05-ல் 3.5% எனவும், 2011-12-ல் 4.4% எனவும் இருந்தது என முடிவுகள் தெரிவிக்கிறது.

 

இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த மாதமே தயாரிக்கப்பட்டும் இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவில்லை என்று, கடந்த 29-ம் தேதி தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் தலைவரான பி.சி.மோகனன் மற்றும் ஆணையத்தின் மற்றொரு உருப்பினர் மீனாட்சி ஆகிய இருவரும் பதவி விலகியுள்ளனர். 

 

‘ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம்’ என்ற கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்ததும், இந்த ஆய்வு முடிவுகளும் மற்றும் தயாரிக்கப்பட்டும் வெளியிடாமல் தாமதிப்பதும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு மறைக்க முயற்சித்திருக்குமோ எனும் சந்தேகத்தை எழுப்புகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நடத்திய முதல் வேலையின்மை தொடர்பான ஆய்வு இது என்பது கவனிக்கவேண்டியது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலா வாகனம் குறித்த கருத்து... அதிமுக எம்.பி, விளக்கம்..!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Comment on Sasikala vehicle ... AIADMK MP, explanation ..!

 

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், அதிமுக ஆட்சியின்போது நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் தண்டணை அனுபவித்தார். பின்னர் அங்கு கரோனா தொற்று ஏற்பட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு வெளியே வந்த சசிகலா, சென்னைக்கு வருவதற்கு முன் பெங்களூரு தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளார்.

 

சசிகலா, மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் ரிசார்ட்டுக்குச் சென்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சசிகலா அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் சென்றதற்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிமுக வட்டாரத்திலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் சசிகலாவை வரவேற்றும் ஆதரித்தும் தென்மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
 

Comment on Sasikala vehicle ... AIADMK MP, explanation ..!

 

இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் குமரி அதிமுக முன்னாள் மா.செ.வுமான விஜயகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலா அதிமுக கொடி கட்டி சென்ற வாகனத்தைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பலர் லைக்கும் போட்டிருந்தனர். இதுவும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகுமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அதிமுக மா.செ பதவிகள் அப்போது சசிகலாவின் தயவில்தான் கிடைத்தது. அதனால்தான் அவர் அந்த வாகனத்தைப் பதிவிட்டதாக எதிரணியினர் குற்றம் சாட்டினார்கள்.

 

இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது, “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அந்த வாகனத்தைப் பயன்படுத்தினார். அவர் மறைவுக்குப் பிறகு இப்போது அதிமுக கொடியுடன் அந்த வாகனத்தைப் பார்க்க முடிந்ததால்தான், ட்விட்டரில் அதைப் பதிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Next Story

"வேலையில்லா இளைஞர்களைக் காலிப் பணியிடங்களில் அமர்த்து!" - டி.ஒய்.எஃப்.ஐ போராட்டம்!

Published on 19/11/2020 | Edited on 20/11/2020

 

 

dyfi protest

 

ரயில்வே துறை, மின்சார வாரியம் என அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்குப் படித்தும் வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு, வேலை கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)  சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைத்து, தமிழகம் முழுக்க இன்று (19-11-2020) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஈரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கூறும்போது, மின் வாரியத்தில் 50,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது. இதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

 

மின் வாரியத்தில் தேர்வு செய்த 10,000 கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அதேபோல், 2,500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் (TA) பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மின் வாரியம் அறிவித்த 2,900 கள உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1,300 கணக்கீட்டாளர் பணியிடத்தை, உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.