The unchanging north state... the brutality of the tribal woman!

Advertisment

வட மாநிலங்களில்கொடூரத்தனமாகதாக்குதல் நடத்தும் காட்சிகள் அவ்வப்பொழுது இணையங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகிவைரலாவதுதொடர்ந்து நடக்கிறது. அதிலும்குறிப்பாகபெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் கொடூர தாக்குதல் சம்பவங்கள் தொடர்பானவீடியோக்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்தவகையில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் ஆண்களால் கொடூரமாக பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் நெஞ்சை உறைய வைக்கிறது.

உத்திர பிரதேசம் மாநிலம்தேவாஸ்பகுதியில் திருமணமான பழங்குடியின பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பழகியதாக அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் ஆண்கள் அந்த பெண்ணை நடுவீதிக்குகொண்டுவந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெண்ணின் ஆடைகளைக் கிழித்ததோடு, அதேநிலையில் தோளில் இருபுறமும்கால்களை போட்டவாறுகணவனைதூக்கிச்சென்றுஊரைசுற்றிவர வேண்டும் எனத்தண்டனை விதிக்கப்பட்டு அதன்படி கொடூரத்தனமாக நடத்தப்பட்டுள்ளார். இந்தவீடியோகாட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவேஇதுபோன்று நிகழும் தாக்குதல் சம்பவங்களினால் வட மாநிலங்கள்அவப்பெயரைபெற்று வரும் நிலையில், 'எத்தனை வளர்ச்சி வந்தாலும் மாறாத வடமாநிலம்'எனப்பலர் இந்த தாக்குதல்வீடியோவிற்குசமூகவலைதளங்களில்கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.