தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல்தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லாமற்றும்அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் எட்டு மாத காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் தேதி உமர் அப்துல்லாவின் தந்தை ஃபரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.