செருப்பை தூக்கவே அரசு ஊழியர்கள் - பாஜக முன்னாள் முதல்வர் சர்ச்சை பேச்சு!

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும்,பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி அரசு ஊழியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதியை சந்தித்த பிற்படுத்தப்பட்டோர் மகாசபை அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். சாதிவாரி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும், தனியார் பணியில் இடஒதுக்கீடு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை உமா பாரதியிடம் அவர்கள் முன்வைத்தனர்.

இதைக் கேட்ட அவர், “நிச்சயம் செய்யலாம்.அரசு ஊழியர்களுக்கு இதைவிட வேறு வேலை என்ன இருக்கிறது?அவர்களுக்கு நாம்தானே சம்பளம் கொடுக்கிறோம், செருப்பைத் தூக்கி வர வேண்டும் என்றால் கூட அதை அவர்கள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “முன்னாள் முதல்வரின் இந்தப்பேச்சு வெட்க கேடானது” என்று கூறியுள்ளது. அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரவே தான் பேசியதற்கு உமாபாரதி ட்விட்டர் வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

uma bharathi
இதையும் படியுங்கள்
Subscribe