Skip to main content

செருப்பை தூக்கவே அரசு ஊழியர்கள் - பாஜக முன்னாள் முதல்வர் சர்ச்சை பேச்சு!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

 

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி அரசு ஊழியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதியை சந்தித்த பிற்படுத்தப்பட்டோர் மகாசபை அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். சாதிவாரி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும், தனியார் பணியில் இடஒதுக்கீடு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை உமா பாரதியிடம் அவர்கள் முன்வைத்தனர். 

 

இதைக் கேட்ட அவர், “நிச்சயம் செய்யலாம். அரசு ஊழியர்களுக்கு இதைவிட வேறு வேலை என்ன இருக்கிறது? அவர்களுக்கு நாம்தானே சம்பளம் கொடுக்கிறோம், செருப்பைத் தூக்கி வர வேண்டும் என்றால் கூட அதை அவர்கள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “முன்னாள் முதல்வரின் இந்தப் பேச்சு வெட்க கேடானது” என்று கூறியுள்ளது. அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரவே தான் பேசியதற்கு உமாபாரதி ட்விட்டர் வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுக்கடை மீது கல் வீசி தாக்கிய பா.ஜ.க.வின் உமா பாரதி (வைரலாகும் வீடியோ) 

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

WINE SHOP BJP LEADER UMA BHARATI IN MADHYA PRADESH

 

மத்தியப் பிரதேசத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான உமா பாரதி, மதுக்கடை மீது கல்வீசும் காட்சி வெளியாகியுள்ளது. 

 

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மாவட்டத்தில் உள்ள ஆசாத் நகரில் அமைந்துள்ள மதுக்கடை ஒன்றின் மீது கல் வீசுகையில், அவரைச் சூழ்ந்திருந்த தொண்டர்களும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். தொழிலாளர்கள் தங்களது வருவாயை மது அருந்துவதற்கே செலவிடுவதாகவும், எனவே, அவர்களை நம்பியுள்ள அவரது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் உமா பாரதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மதுக்கடை மீது கல்வீசித் தாக்கிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

மத்தியப் பிரதேசத்தை ஆளும் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு, சமீபத்தில் மதுபானங்களின் விலையை 20% குறைத்திருந்தது. இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உமா பாரதி போராட்டத்தில் இறங்கியுள்ளார். மேலும், தனது போராட்டம் மாநில அரசுக்கு எதிரானது இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 

 

பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில், அக்கட்சியின் தலைவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Next Story

ராகுல் குடும்பத்தில் காந்தி பெயர் எப்படி வந்தது? - விளக்கமளித்த உமா பார்தி

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

மத்திய அமைச்சர் உமா பாரதி நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது, ஏன் ராகுல் குடும்பத்தில் காந்தி என்ற துணை பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு விளக்கம் ஒன்றை தெரிவித்தார்.
 

uma bharthi

 

 

“காந்தி என்கிற வார்த்தை மஹாத்மா காந்தியிடம் இருந்து வந்ததல்ல பெரோஸ் காந்தியிடம் இருந்து வந்தது. பெரோஸ் காந்திக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் ஒத்துவரவில்லை. அவர்களுக்கு இந்த துணை பெயரை பயன்படுத்த உரிமை இல்லை. ஆனாலும், இந்த பெயரினால் மரியாதை கிடைக்கும் என்று பயன்படுத்துகிறார்கள். உண்மையில் மோடிதான் காந்தியின் பாதையை சரியாக பின்பற்றுபவர்” என்று பேசினார்.