பாஜக மூத்த தலைவர் உமாபாரதி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வருமான உமாபாரதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இமயமலை சென்றிருந்தார். இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சந்தேகத்தின் பேரில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது ஓட்டுநருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உமாபாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.