Boris Johnson

இங்கிலாந்துபிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியகுடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் மரபணு மாற்றமடைந்த (இங்கிலாந்திலிருந்து பரவிய கரோனா) கரோனாபரவல் வேகமெடுத்ததால் இந்தப் பயணம் இரத்தானது. இந்திய குடியரசு தின விழா, சிறப்பு விருந்தினர் இல்லாமல் கொண்டாடப்பட்டது.

Advertisment

இதன்பிறகு ஏப்ரல் 26ஆம் தேதி போரிஸ் ஜான்சன் இந்தியா வரவிருந்தார். அப்போது அவர் சென்னைக்கும்வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சென்னையில் அவர் கலந்துகொள்ளும்நிகழ்ச்சிகளின்பட்டியல் தயாராகி வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.

Advertisment

இந்தநிலையில், போரிஸ் ஜான்சனின்இந்தியவருகை இரத்தாகியுள்ளது. கரோனாபரவல் அதிகரித்து வருவதால், போரிஸ் ஜான்சனின்வருகை இரத்துசெய்யப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.