உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியாவில் உருமாறிய வைரஸ் பரவியது. தமிழகத்தில் கூட ஒருவருக்கு இந்தப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் யாருக்கும் உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இந்தியாவில்உருமாறிய வைரஸால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறையில் சிகிச்சையளிப்பட்டு வருகிறது.