flights

Advertisment

இங்கிலாந்து நாட்டில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்தநாட்டில் புதிய வகை கரோனா தொற்று வேகமாகபரவி வருகிறது.

இங்கிலாந்தில் புதியவகைகரோனாபரவலைத்தொடர்ந்து, அங்கிருந்து விமானங்கள் வருவதற்குசவுதி அரேபியா, கனடாஉள்ளிட்ட பல உலகநாடுகள் தடை விதித்துள்ளன.

அதேபோல் இந்தியாவும், இங்கிலாந்திலிருந்து விமானங்கள் வர, நாளை (31.12.2020) வரை தடை விதித்திருந்தது. தற்போது இந்த தடையைஜனவரி7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில்இதுவரை 20 பேருக்குபுதிய வகை கரோனாதொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.